தமிழ்நாடு என்ற பெயரை கேட்டாலே எரிந்து விழும் அனுஷ்கா காரணம் அந்த நடிகர் தானாம்

பிரபல நடிகை அனுஷ்காவுக்கு தற்போதைக்கு பிடிக்காத இடம் எது என்றால் அது தமிழ்நாடுதானாம். ஏன் என்று கேட்டால் அதற்கு ஒன்றல்ல... பல காரணங்கள் இருக்கிறது என்று அடுக்குகிறாராம்.

அனுஷ்கா கடந்த 2005 ம் ஆண்டு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டே தமிழில் ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். ஆனால் தமிழ் சினி உலகமோ அனுஷ்காவை கண்டுகொள்ளவே இல்லை.

இதனால் தெலுங்கில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வந்த அனுஷ்கா நடிகர் விஜய்யின் வேட்டைக்காரன் மூலம் மீண்டும் சென்னைக்கு வந்தார். 

அதற்கு பிறகு தமிழில் அனுஷ்காவுக்கு வாய்ப்புகள் மள மளவென குவிந்தன. இருப்பினும் தன்னை ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லையே என்ற வருத்தம் தமிழ் ரசிகர்கள் மீது அனுஷ்காவுக்கு உண்டு.

தெலுங்கிலும் இவரை வைத்து எக்கச்சக்க கிசுகிசுக்கள் வந்திருக்கின்றன. நடிகர் நாகார்ஜுனா, நாகசைதன்யா என்று தந்தை மகன் ஆகிய இருவருடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார் அனுஷ்கா. 

அவ்வாறு இருப்பினும் கூட தமிழில் நடிகர் ஆர்யாவுடன் வந்த கிசுகிசுக்கள்தான் அனுஷ்காவை அதிகம் பாதித்ததாம். அதனாலேயே என்னவோ தமிழ் மீடியாக்களுக்கு அனுஷ்கா பேட்டியளிப்பதையேத் தவிர்த்தார்.

ஆனால் நம்ம ஆட்கள் சும்மா இருப்பார்களா? வார இதழ் ஒன்றில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை அனுஷ்கா பேட்டி என்று எதையாவது எழுதி விடுவார்கள். இதையெல்லாம் பார்த்து தான் பயங்கர மூட் அவுட் ஆவாராம் அனுஷ்கா. 

அதிலும் குறிப்பாக நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் என்ற ரீதியில் அடிக்கடி வந்த செய்திகள் தான் அனுஷ்காவை அதிகம் பாதித்ததாம்.

 

அதோடு மட்டுமில்லாமல் தெலுங்கில் ஆதி காலத்தில் அனுஷ்கா நடித்த படங்களை தமிழில் டப் செய்து விடுகிறார்கள். இதுவும் அனுஷ்காவை மேலும் கடுப்பேற்றி இருக்கிறது. 

தெலுங்கில் ப்ளாப் ஆன படங்களை கூட டப் செய்து மிகுந்த வெறுப்பேற்றுகிறார்களாம் இங்கிருக்கும் ஆட்கள். இந்த காரணங்களால் தான் தமிழ் என்ற பெயரை கேட்டாலே எரிந்து விழுகிறார் அனுஷ்கா. கதை சொல்ல வரும் தமிழ் இயக்குநர்களையும் அவர் பக்கத்திலேயே அனுமதிப்பதில்லையாம்.

2017 ம் ஆண்டில் உண்மையில் மண்ணை கவ்வியது தலையா தளபதியா