வீட்டில் சடலமாக கிடந்த இரண்டு சிறுமிகள் கனடாவில் சம்பவம்

கிறிஸ்துமஸ் தினம் அன்று கனடாவில் சிறுமிகளான இரண்டு சகோதரிகள் வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.

கனடாவின் பிரீட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒக்கே பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் 6 வயதுடைய Chole மற்றும் 4 வயதுடைய Aubrey Berry என்ற சகோதரிகள் இருவருமே பொலிசாரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அதே இடத்தில் ஆண் ஒருவர் காயத்துடன் கிடந்த நிலையில் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமிகள் இருவரும் தங்களது தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்ததாக தகவல்கல் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துக்கான காரணங்கள் எதுவும் தெரியாமல் உள்ள நிலையில் கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்காக இதனை பதிவு செய்து மேலதிக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

தனி ஒருவனாக சட்டசபை செல்லும் தினகரன்முதல் கூட்டமே அமர்க்களப்படப் போகுது