வடகொரியாவின் ஏவுகணை தயாரிப்பாளர்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா

வட கொரியாவின் இரண்டு அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. வட கொரியாவின் அணு ஏவுகணை திட்டங்களில் இந்த இரண்டு அதிகாரிகளும் முக்கிய பங்காற்றிவருவதாகவும் வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தில் இவர்கள் இருவரும் முக்கியத் தலைவர்கள் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

வட கொரியா அண்மையில் நடாத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடி வழங்கும் முகமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று வட கொரியா மீது புதிய பொருளாதாரத்தடைகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்தது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து ஐ.நாவின் இந்த நடவடிக்கை போருக்கான செயல் என்றும் முழு பொருளாதார முற்றுகைக்குச் சமமானது என்றும் வட கொரியா எச்சரித்திருந்தது.

இந்நிலையில் வடகொரியாவின் இரண்டு முக்கிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. இதனால் இந்த இரு அதிகாரிகளும் அமெரிக்காவில் எந்த பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது எனவும் அமெரிக்காவில் அவர்கள் ஏதேனும் சொத்து வைத்திருந்தால் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு அதிகாரிகளும் ஆயுத தயாரிப்பாளர் ஜங் சான்-ஹெக்கிம் கிம் ஜோங் உன்னால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் என கடந்த மே மாதம் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திரையில் இருந்ததை விட கயிற்றில் தொங்கிய நாட்களே அதிகம்