ஐந்து நிமிடத்திற்கா என்னை இந்த பாடு படுத்தினீர்கள் மோகன்ராஜாவுக்கு சினேகா கேள்வி

சமீபத்தில் வெளியான வேலைக்காரன்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே ஊடகங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக சினேகாவின் கேரக்டருக்கு பாராட்டுமழை குவிந்தது

ஆனால் சினேகா இந்த படத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். என்னுடைய காட்சிகள் மொத்தம் 18 நாட்கள் படமாக்கப்பட்டது. என்னுடைய கேரக்டருக்காக நான் 7 கிலோ உடலை குறைத்தேன். பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் கேரக்டருக்காக நான் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தேன் 

ஆனால் படத்தில் என்னுடைய காட்சி வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது. மேலும் எடை குறைத்தல் காட்சிகளும் சரியாக இல்லை. உண்மையிலேயே எனக்கு இந்த படம் அதிருப்தியை தந்துள்ளது. வெறும் ஐந்து நிமிட காட்சிகளுக்கா? என்னை இவ்வளவு கஷ்டப்படுத்தினீர்கள்" என்று மோகன்ராஜாவை நோக்கி கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார் சினேகா 

டிரெய்லர் லாரி அடியில் சிக்கி பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக்கில் சென்ற இளம் விமானி உயிரழப்பு