அதிரடி அக்ரிமெண்ட் கைதிகளான பிக் பாஸ் பிரபலங்கள்

முன்னணி தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வாவேற்பு பெற்றதோடு, அதில் பங்கேற்ற பலரை மக்களிடம் பெரும் பிரபலமாக்கியது. இதில், ஏற்கனவே மக்களுக்கு தெரிந்த முகங்கள் சிலர் கலந்துக் கொண்டாலும், ஓரளவே தெரிந்த, யார் என்பதே தெரியாதே, சிலரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் எளிமையாக சென்றடைந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்பளம் வாங்கிக் கொண்டு தான் போட்டியாளர்கள் பங்கேற்றாலும், அந்த நிகழ்ச்சியின் மூலம் தங்களுக்கு கிடைத்திருக்கும் பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு பல விதத்தில் பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

சினிமா வாய்ப்பு, விளம்பர பட வாய்ப்பு, கடை திறப்பு என்று ரொம்ப பிஸியாக இருக்கும் பிக் பாஸ் பிரபலங்கள், தனி தனியாக தங்களது சேவையை செய்துக் கொண்டிருக்க, தனியார் நிறுவனம் ஒன்று அவர்களை மொத்தமாக வளைத்திருக்கிறது.

ஓவியா, ஜுலி, சினேகன், ரைஸா, சுஜா வாருணி ஆகியோரை வைத்து மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ள தனியார் நிறுவனம், அதற்காக இவர்களிடம் அதிரடியான அக்ரிமெண்ட் ஒன்ரையும் போட்டுள்ளது. அதாவது, இந்த நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அதுவரை எந்த காரணத்திற்காகவும் இவர்கள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட எந்த வெளிநாட்டுக்கும் செல்லக்கூடதாம்.

இந்த அக்ரிமெண்டால், திரைப்படம் தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கூட முடியாமல், இந்த பிக் பாஸ் பிரபலங்கள் கைதிகளைப் போல கட்டுப்பட்டு இருக்கிறார்களாம். இவர்கள் இப்படி கட்டுப்பட்டு இருக்க, அந்த நிறுவனம், மிகப்பெரிய தொகையை இவர்களுக்கு வழங்கியதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

காலை முதலே ஸ்தம்பிக்கும் சென்னை திடீரென்று அவதிக்குள்ளாகும் மக்கள் நேற்று இரவு என்ன நடந்தது