1 விநாடிக்கு 10 GB வேகம் 5G இணைய சேவையை வழங்க தயாராகும் இந்தியா

1 விநாடிக்கு 10 GB வேகம் கொண்ட 5G இணைய சேவையை இந்தியாவில் வழங்குவது குறித்து தொலைத் தொடர்புத்துறையின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

இந்திய தொலைத் தொடர்புத் துறையில் தற்போது நான்காம் தலைமுறை எனப்படும் 4G இணைய சேவை பயன்பாட்டில் உள்ளது.

அதன் அடுத்த கட்டமாக ஐந்தாம் தலைமுறை 5G இணைய சேவையை வழங்குவதற்கு தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதற்காக கடந்த செப்டம்பர் மாதம் தொலைத் தொடர்புத்துறையின் உயர்மட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில் நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட 22 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஐந்தாம் தலைமுறை சேவைக்கான மதிப்பீடு, தொழில்நுட்ப பணிகள் உள்ளிட்டவைகளை தொலைத் தொடர்புத் துறையின் செயலாளர் அருணா சுந்தரராஜன் செய்து வருகிறார்.

இதன் மூலம் 1 விநாடிக்கு 10 GB வேகம் கொண்ட இணைய சேவையை பெறமுடியும். இந்த சேவை வரும் 2020-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர தொலைத் தொடர்புத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

அஜித் மோகன்ராஜா கூட்டணியில் புதிய படம் எப்போது தெரியுமா