அஜித் மோகன்ராஜா கூட்டணியில் புதிய படம் எப்போது தெரியுமா

மோகன் இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இரண்டு படத்திலுமே சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை மோகன்ராஜா கூறி உள்ளார்.

இந்த நிலையில், மோகன்ராஜாவிடம் அஜித்துடன் இணைவது குறித்து கேட்டபோது, அஜித் சாருக்காக ஒரு கதை யோசித்தால் 1000 கதைகள் வருகிறது.

ஏனெனில் அத்தனை பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் மிகப்பெரிய நடிகர் அவர். அவருக்காக புதுவிதமான கதையை யோசிக்க வேண்டும்.

சமீபத்தில் கூட ஒரு தயாரிப்பாளர் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டார். நேரம் அமைந்தால் அடுத்த படம் அவருடன்தான் என கூறி உள்ளார். இந்த தகவல் தல ரசிகர்களுக்கு செம்ம சந்தோஷத்தை தந்துள்ளது.

பேப்பர் பொட்டலத்தை பார்த்து ஷாக் ஆன ரஜினிகாந்த் என்னதான் இருந்தது அதில்