சினிமாவை மிஞ்சும் ஆபாசம் தமிழ் தொலைக்காட்சிகளின் இந்த நிலைமைக்கு என்ன காரணம்

தற்போதைய கால கட்டத்தில் தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள் அதிகரித்து விட்டன.

பெரியர்வர்கள் முதல் குழந்தைகள் வரை பார்க்கும் தமிழ் சீரியல்களில் வரும் ஆபாச காட்சிகள் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளது.

ஏன் தமிழ் சீரியல்களில் கூட ஆபாசத்தை புகுத்த வேண்டும் என்கின்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா..?

அதற்கு விடை.., TRP யை அதிகரிக்கவேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கம்தான்.

சீரியல்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது சன் டிவி தான். மெட்டி ஒளி, கோலங்கள், கங்கா யமுனா  என்று அனைத்து பெண்களும் சன் டிவிதான் கதி என்று இருந்தனர்.

அதற்கு போட்டியாக விஜய் டிவி சீரியல்களை தயாரிக்க ஆரம்பித்தது. கனா காணும் காலங்கள்., சரவணன் மீனாட்சி என்று விஜய் டிவி சீரியலில் கலக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது., தெய்வ மகள்., வாணி ராணி போன்ற சீரியல்கள் மட்டுமே சன் டிவியை தாங்கி பிடித்துள்ளது.

அதே நேரத்தில்., தமிழ் தொலைக்காட்சிகளில்., டப்பிங் சீரியல்களின் வரத்து அதிகரித்து விட்டது. மக்கள் அதன் மீதும் தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளனர். 

இதனால்., தொலைக்காட்சி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க தமிழ் சீரியல்களில் ஆபாசத்தை புகுத்தியுள்ளனர்.

சீரியல்களில் கூட ரொமான்ஸ் காட்சிகள்., படுக்கையறை காட்சிகள் மிகவும்  ஆபாசமாக காட்டப்படுகின்றன.

இது சமுதாயத்திற்கு சீர்கேட்டை விளைவிக்கும். TRP க்காக தொலைக்காட்சி பார்க்கும் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கின்றனர்.

இதற்கு முன்பு., மானாட மயிலாட., ஜோடி NO .1 போன்ற நடன நிகழ்ச்சிகள் ஆபாசமாக உள்ளது என்கின்ற குற்றசாட்டு எழுந்தது.

ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "ரெடி ஸ்டெடி" நிகழ்ச்சி ஆபாசத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளது.

TRP க்காக நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

சில தொலைக்காட்சிகள் கல்வி., விவசாயம் போன்றவற்றிக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அது போன்ற தொலைக்காட்சிகளை பார்க்க குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

இல்லை என்றால்.., குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை கேள்வி குறியாவதற்கு.., தொலைக்காட்சி மட்டுமில்லாமல்., நீங்களும் காரணமாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

நள்ளிரவில் போலீஸ் உடையில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி