ரத்தத்தை வாரி இறைத்த கர்நாடக வாலிபர் தமிழக பெண்ணின் உயிரை காக்க செய்த நெகிழவைக்கும் காரியம்

தமிழக கர்ப்பிணி பெண்ணின் உயிரை காக்க பெங்களூரில் இருந்து வந்து இரத்தம் கொடுத்து ஒரு வாலிபர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மைதிலி என்ற பெண் தனது 2-வது பிரசவத்துக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இவரது ரத்தத்தை பரிசோதனை செய்த போது எச்.எச். என்ற வகையை சேர்ந்த ரத்த பிரிவு இருந்தது தெரிய வந்தது.

ஏ, பி, ஓ, ஏபி. ஆகிய பிரிவுகளில் ரத்தம் வகைகளை தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் எச்.எச். பிரிவு ரத்தம் இருப்பது அரிதானது.

அவருக்கு ரத்தம் செலுத்திதான் பிரசவம் பார்க்க முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

ஒருவழியாக எச்.எச். ரத்தம் மும்பை ரத்ததான கிளப்பில் பதிவு செய்தவர்களிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அங்கிருந்து ரத்தத்தை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.இந்த நிலையில் எச்.எச். ரத்தம் தேவைப்படுவது குறித்து பல்வேறு ரத்த குழுக்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து  பெங்களூரில் பணியாற்றி வந்த  ஆதித்யா ஹெக்டே என்பவருக்கு எச்.எச். பிரிவு ரத்தம் இருந்தது.

அவர் இந்த செய்தியை பார்த்து விட்டு ரத்தம் அளிப்பதாக ஒப்புக்கொண்டு பெங்களூரில் இருந்து ரெயிலில் சென்னை வந்து மைதிலிக்கு ரத்த தானம் வழங்கினார்.

நல்லபடியாக பிரசவம் முடிந்தது. அதன் பிறகு ஆதித்யா ஹெக்டே பெங்களூர் திரும்பி சென்றார்.

இரு மாநிலங்களும் நதி நீர் என்ற ஒன்றை வைத்து அடித்துக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஒரு பெண்ணை காப்பாற்றுவதற்காக பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து ரத்ததானம் அளித்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து அந்த வாலிபர் மேலும் கூறிய தகவல் தான் வியக்க செய்கிறது. இது குறித்து அவர் பேசுகையில்,

நான் இதுவரை 55 தடவை ரத்ததானம் செய்து இருக்கிறேன். எனது ரத்தம் அரிய வகையை சேர்ந்தது என்பதால் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கூட எனது ரத்தத்தை எடுத்து பார்சல் மூலம் அனுப்பி இருக்கிறார்கள்.

மலேசியா, பாகிஸ்தான், இலங்கை நபர்களுக்கு இவ்வாறு அனுப்பப்பட்டு உள்ளது' என்று கூறினார்.

விறப்பனைக்கு வந்த விபரீதம் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கும் தமிழகம்