போராடியதற்காக, நிர்வாணமாக நிற்க வைத்த போலீஸ் பெண் போலீஸ் நடந்து கொண்ட முறை

திருநங்கை கிரேஸ் பானு கூறுகிறார், கேளுங்கள்,

பெண்களுக்கு மட்டுமே பாலியல் சீண்டல்கள் நடப்பதில்லை. அவர்களைவிட அதிகமாக எங்களுக்கு நடக்குது, பல பேருக்கு இது தெரிவதில்லை..

ஆனால், எங்களைப் பாதுகாக்க சட்டத்தில் இடமில்லை..

திருநங்கைகள் பெரிதாக பாதிக்கப்படுவது சொற்களாலும் உடல்ரீதியாகவும் தான். நான் ஒரு கிராமத்தில் பிறந்தேன். அங்கேதான் பள்ளியும் படித்தேன்

பெற்றோர், உடன்பிறந்தோர் என அனைவரும் இருந்தும்  சமூகம் என்னை வீட்டைவிட்டு வெளியேற வைத்தது

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களை நான் பார்த்து விட்டேன்..

பள்ளி படிக்கும்போதிலிருந்து என்னைச் சரியாக உணர்ந்தேன். என் பெற்றோரோ, எனக்கு மனநிலை சரியில்லனு மனநல மருத்துமனையில் அட்மிட் செய்தாங்க..

அங்கிருந்து வெளிவர, நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு எந்த மாற்றமும் இல்லை என்று பொய் சொல்லி வீட்டுக்கு வந்தேன்.

பன்னிரண்டாம் வகுப்பு படிச்சப்போ நான் அனுபவித்தது,

திருநங்கைங்குனு சொல்லி பள்ளியில் என்னை ஏற்று கொள்ள அனுமதிக்க வில்லை என் அம்மாவும் அப்பாவும் தலைமை ஆசிரியர் கால்ல விழுந்து கெஞ்சினாங்க. அப்போதும் ஒன்றும் வேலையாக வில்லை கடைசியாக ஒரு கண்டிஷன் போட்டாங்க..

கிளாஸ்குள்ள அனுமதிக்காம, அவர் ரூம் வாசலில் செருப்பு வைக்கும் இடத்துல உட்கார்ந்துதான் நான் படிக்கணும்அதுவே அந்த கண்டிஷன்..

பள்ளியில், அலி போன்ற இழிவுபடுத்தும் வார்த்தைகளில் என்னை கூப்பிடுவாங்க. கழிவறை கூட  போக முடியாது. சில பசங்க முத்தம் கொடுத்துட்டு ஓடுவாங்க. 

ஒரு பொண்ணுக்கு இந்த நிலை என்றால் கம்ப்ளைன்ட் செய்யலாம் ஒரு திருநங்கை யார்கிட்ட  முறையிடுவது..?

 

பின் சில வீட்டு தொல்லைகளால் வீட்டைவிட்டு வெளியேறினேன்..வீட்டைவிட்டு வெளியேறிய திருநங்கையை இந்தச் சமூகம் எப்படி நடத்தும்னு சொல்லணுமா? 

என்னை மாதிரி ஒரு திருநங்கை அரவணைப்பில் வளர்ந்தேன். அப்போதான் டிப்ளோமோ படிக்கப்போனேன்.

அந்தக் காலேஜில் ஒரு சில பசங்க என்னை ஏத்துக்கிட்டாங்க. ஒரு சிலர் திருநங்கைனு ஒதுக்கினாங்க. கொஞ்ச நாளில் இன்ஜீனியரிங் காலேஜ் சேர்ந்தேன்.

அந்த காலேஜில் கொஞ்சம் ஆறுதல் கிடைச்சது. அங்கே படிச்ச பசங்க, என்னை அக்காவா பார்த்தாங்க;

நான் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சமயம், ஒரு வீட்டில் நானும் பிரித்திகாவும் (பிரித்திகா என்பவர் இன்றைய, முதல் திருநங்கை சப் இன்ஸ்பெக்டர்) மட்டும்தான் இருந்தோம்.

இரவு  ஒரு மணி இருக்கும்... யாரோ வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு, ஜன்னல் வழியா பார்த்தோம்.  ஒருத்தன் கதவு பக்கம் நின்று, நான் உள்ளே வரே'னு சொன்னான்.

நாங்க அவனை விரட்டறோம். ஆனாலும், அவன் கதவை தொடர்ந்து தட்டிப் பார்த்துட்டு, கல்லைத் தூக்கி போட்டான்..இரவு ஒரு மணிக்கு எங்க வீட்டுக் கதவை தட்டி கூப்பிடும் உரிமையை, தைரியத்தை அவனுக்கு யார் கொடுத்தாங்க? 

நான் சமூகப் போராட்டகளில் பங்கேற்று கைதுசெய்து கூட்டிட்டுப் போகும்போது, போலீஸ் கண்ட கண்ட இடத்தில் கை வைப்பாங்க.

அனிதாவுக்காகப் போராடும்போது என் ஆடைகளைக் கழற்றி, நிர்வாணமா நிற்க வைத்ததை எங்கு சென்று முறையிட..? 

ஆண்கள் மட்டுமில்லாமல், பெண்களும்  எங்களை பாலியல் வன்கொடுமை செய்தாங்க..

ஒரு பெண் போலீஸ், நான் அறுவை சிகிச்சை செய்த இடத்தைப் பார்த்துட்டு, உடன் இருந்த சக போலீஸ்கிட்ட சொல்லி சிரிச்சாங்க

 நாங்களும் மனிதர்கள்தான் என்பதைச் சட்டமும், சமூகமும் உணர வேண்டும்..

வாயை திறப்போருக்கெல்லாம் வரப்போகும் ஆபத்து விபரீதமாகும் ஜெயலலிதா விவகாரம்