மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்

குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் தற்போது வாக்கு எண்ணிக்கையில் அடிப்படையில் பா.ஜ.க தான் முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இருமாநில தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரித்தாளும் அரசியல், வெற்றி பெறாது என்று அறிந்தீர்களா எனக் கூறி பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், பாகிஸ்தான் மதம், சாதி இவற்றை எல்லாம் கடந்து ஒரு பிரச்சனை இருப்பது தெரிகிறதா? என்றும் கிராமப்புற விவசாயிகள் மற்றும் ஏழைகளின் புறக்கணிக்கப்பட்ட சப்தம் நிறைந்த குரல் இது சிந்தித்து செயலாற்றும்படி பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு உங்களது இராசிக்கு அதிஷ்ட எண் என்ன தெரியுமா