சோறு போடும் விவசாயிகளுக்காக தனது விலை உயர்ந்த காரை விற்ற பிரபல நடிகர்

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான்- ஈ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கிச்சா சுதீப்.

தொடர்ந்து பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர் நன்கு பரிச்சயம் ஆனார்.

ஏற்கனவே கர்நாடக சினிமா துறையில் முன்னணி நடிகரக உள்ள சுதீப், தற்போது கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதன் மூலம் பரபரப்பான நடிகராக மாறியுள்ளார்.

கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும், சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை கொண்ட படங்களில் நடிப்பது சுதீப்பின் வழக்கம்.

சமூக நலன் சார்ந்த இவரது அக்கறை தற்போது சினிமாவை தாண்டி நிதர்சன வாழ்க்கையில் ஏற்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் பல கன்னட திரைப்பட நடிகர்கள், சமூகம் சார்ந்த நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகர் கிச்சா சுதீப், கர்நாடக விவசாயிகள் நலனிற்கு வேண்டி தனது பிஎம்டபுள்யூ காரை விற்பதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரில் விவசாயிகள் நலன் மற்றும் உரிமைகளுக்கு வேண்டி இயங்கும் தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த பொது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுதீப் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், கர்நாடக மாநில விவசாயிகள் நலனிற்கு வேண்டி, தனக்கு சொந்தமான ஒரு வீட்டை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக தெரிவித்தார்.

பிறகு திரைப்பட துறையில் இருந்தாலும் பெரியளவில் சொத்துக்கள் இல்லை என்று பேசிய சுதீப், தனது பிஎம்டபுள்யூ எக்ஸ்6 சிரீஸ் காரை விற்பதாக அறிவித்தார்.

இவர் பயன்படுத்தி வரும் பெரியளவிலான ஆடம்பர கார் இதுதான். மேலும் காரை விற்று கிடைக்கும் பணத்தை விவசாய நலனிற்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக கூறினார்.

நடிகர் கிச்சா சுதீப் பயன்படுத்தி வரும் பிஎம்டபுள்யூ எக்ஸ்6 சிரீஸ் காரின் எண் KA 05 MJ 101. இந்த காரில் உயர் தொழில்நுட்பம் மற்றும் நவீன கட்டமைப்புகளும் உள்ளன.

இந்திய சந்தையில் ரூ.7.89 லட்சம் மதிப்பில் விற்பனையாகும் பிஎம்டபுள்யூ எக்ஸ்6 மாடல் கார், டீசல் மற்றும் பெட்ரோல் என இருவேறு தேவைகளில் கிடைக்கிறது.

2018புத்தாண்டுபலன் கடகம் ராசிக்காரர்களே இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்தான்