விஸ்வாசம் இசையமைப்பாளர் இவர்தான்அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சத்யஜோதி ஃபிலிம்ஸ்

விஸ்வாசம் படத்தில் அஜித் புதிய தோற்றத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், படம் குறித்த சிறு சிறு அப்டேட்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளன

சமீபத்தில், அஜித்தின் புதிய தோற்றம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இதனையடுத்து, அஜித் ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ்.

அதன்படி, விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்றும் ஒளிப்பதிவாளராக வெற்றி பணியாற்றுவார் என்றும். விவேகம் படத்திற்கு எடிட்டிங் செய்த எடிட்டர் ரூபன் இந்த படத்திற்கு எடிட்டிங் வேலைகளை செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அஜித், யுவன் மிரட்டல் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதையடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ஒரே நாளில் ஒரு கோடியே 89 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்திழுத்த ஜூராசிக் பார்க் டிரெய்லர்.!!