மெரீனா கடற்கரை 2 மி.மீ. அளவுக்கு விரிவடைந்து கொண்டே வருகிறது பேரிடர் மேலாண்மை நிபுணர்

கடல் அரிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சென்னை மெரீனா கடல் பகுதி ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லி மீட்டர் அளவுக்கு விரிவடைந்து வருகிறது.

இது குறித்த தகவலை  பேரிடர் மேலாண்மை நிபுணரான ஆர்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற உயர் கல்வி நிறுவனங்களின் வளாகப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில்அவர் பேசுகையில்,

கடந்த 40 ஆண்டுகளாக மெரீனாவில் கடல் அரிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, சென்னை துறைமுகம் கட்டப்பட்ட பிறகு  இது மேலும் அதிகரித்தது.

கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் ஒவ்வோர் ஆண்டும் 2 மி.மீ. அளவுக்கு மெரீனா கடல் பகுதி விரிவடைந்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது வடசென்னை கடல் பகுதிதான்.

2004-இல் சுனாமி , 2015-இல் பெரு வெள்ளம் ஆகியன சென்னையின் திட்டமிடல் நிலையை நன்கு உணர்த்தி விட்டன.

தமிழகத்தில் பேரிடர் மேலாண்மைக்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டபோதும், அவற்றை இன்னும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியவில்லை.

இதற்கு முழுமுதற்காரணம் மக்களின் ஈடுபாடு இல்லாததே. இதுபோன்ற பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் அரசாங்கமே செய்யவேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர்.

நிச்சயமாக இது சாத்தியம் இல்லை. அந்தந்தப் பகுதி மக்கள் ஈடுபாடு இருந்தால் மட்டுமே, பேரிடர் முன்னெச்சரிக்கைத் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்' என்று கூறி உள்ளார்.

என் எதிரி தனுஷ் கூட சேர்ந்து பர்ஸ்ட் டே ஷோ பார்த்தேன் தெரியுமா? மேடையில் சிம்பு ஓபன்டாக்