விஜய் சேதுபதியா இது.? – வாயை பிளக்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படம். இந்த படத்தினை ஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். மேலும், ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி, நதியா ஆகியோருடன் பல பிரபலமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்திற்கு முதலில் அநீதி கதைகள் என்று தான் பெயர் வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது தலைப்பை மாற்றி “சூப்பர் டீலக்ஸ்” என்று வைத்துள்ளனர். தலைப்பு மட்டும் மாறவில்லை நடிகர் விஜய்சேதுபதியே மாறி தான் இருக்கிறார்.

ஆம், இந்த படத்தில் ஷில்பா என்ற பெண் வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பெண் வேடத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியா இது.? என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தை படக்குழுவே வெளியிட்டு, இந்த கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா என தெரிவித்துள்ளார்.

 

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்- தகவலை வெளியிட்ட நடிகர் மோகன் ராமன் (புகைப்படம் உள்ளே)