தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட இரண்டு நாள் எச்சரிக்கை

ஏற்கனவே வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது படி,

தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான தீவிர காற்றழுத்தப் பகுதி ஞாயிறன்று அதாவது டிச. 3 அன்று காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.

தற்போது தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு சுமத்ரா தீவு கடற்கரை வரை அது பரவி தன்னுடைய நிலையை வலுவாக அங்கே ஊன்றியது

அதன் பின் மீனவர்களின் வாழ்க்கையை சிதைத்தது, விவசாயிகள் பெரும் இழப்பிற்கு ஆளாகினர்..

மீண்டும் வந்த எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென் கிழக்கு வங்க கடலில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை

அடுத்த 12 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஊன்றி நிற்கும். இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி செல்லும்.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். கனமழைக்கு வாய்ப்பு இல்லை.

இருந்தாலும்,மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். ஆழ் கடலில் உள்ளவர்கள் கரைக்கு உடனே திரும்ப வேண்டும். என அவர் கூறியுள்ளார்

டிசம்பர் 19ல் சனிப்பெயர்ச்சி... இந்த 6 ராசியினருக்கு செம்ம அதிர்ஷ்டம்!