பெரும் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துக் கொண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்!

இதில் ஒருசில திருமணங்கள் 'அடடே' போட வைக்கும். மறுசில திருமணங்கள் 'அடேய்' சொல்ல வைக்கும். திருமணத்தில் வயது வித்தியாசம் கட்டாயம் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியதில் பல சூச்சமங்கள் அடங்கி இருக்கின்றன. இது மன ரீதியான, உடல் ரீதியான முதிர்ச்சியை சார்ந்தது ஆகும். முன்னரே சில போலட் ஸ்கை தமிழ் கட்டுரைகளில் நாம் இதுகுறித்து அலசியுள்ளோம்.

மன ரீதியாக ஒரு ஆணை விட, பெண்ணின் முதிர்ச்சி அதிகமாக இருக்குமாம். அதனால் தான் சிறு வயது பெண்ணை, அஃதாவது, 5-7 வருட வயது வித்தியாசம் உள்ள பெண்ணை திருமணம் செய்ய கூறுகிறார்கள். அதே போல, உடல் ரீதியாக காணும் போதும், ஆணின் உணர்சிகள், பெண்ணின் உணர்சிகள் மத்தியில் ஏறத்தாழ 10 வருட இடைவெளி இருக்கின்றன.

எனவே, உளவியல் ரீதியாகவும், தாம்பத்தியம் ரீதியாகவும் ஒத்துப்போகவே இந்த வயது வித்தியாசம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நம்ம ஊர்களில் சில தாத்தா, பாட்டிகளுக்கு மத்தியில் 17-20 வயது வித்தியாசத்தை சாதாரணமாக பார்த்திருப்போம். அது போல, நமது கிரிக்கெட் நட்சத்திர வீரர்களில் யார், யார் அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துள்ளனர் என்பது குறித்த தொகுப்பு தான் இது....

தோனி!

டி-20, உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி வாங்கிக் கொடுத்த ஒரே கேப்டன் தல தோனி. இவரும் சாக்ஷியும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது. அந்த காதல் கதை எப்படி, எங்கு, எந்த தருணத்தில் துவங்கியது என்பதை தோனி அண்டோல்ட் ஸ்டோரியில் தெள்ளத்தெளிவாக கூறி இருந்தனர்.

 

இதிலும், ஏழு!

தோனிக்கும் சாக்ஷிக்கும் பத்து வருட வயது வித்தியாசம், இவர் பள்ளி முடிக்கும் போது சாக்ஷி ஒன்றாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார் என்றெல்லாம் செய்திகள் அவ்வப்போது வந்துக் கொண்டே இருக்கும். தோனிக்கும், சாக்ஷிக்கும் வயது வித்தியாசம் அதிகம் தான். ஆனால், அது பத்து வருடம் அல்ல, ஏழு வருடம்.

 

இர்பான் பதான்!

இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷம். ஒரு நல்ல ஸ்விங் பவுலர். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய அசாத்திய வேக பந்துவீச்சாளர். தேவையின்றி ஆல்-ரவுண்டர் ஆக்குகிறோம் என கூறி, முன்னே இறக்கி பேட்டிங் செய்ய வைத்து, ஒரு நல்ல வீரரை இந்தியா இழந்தது என்பது தான் உண்மை.

 

சவுதி மாடல்!

இர்பான் பதான் மிகவும் பின்தங்கிய ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தவர். இந்தியாவுக்காக விளையாடியே முதல் அண்ணன் - தம்பி காம்போ பதான் சகோதரர்கள். இர்பான் பதான் சவுதி அரேபியாவை சேர்ந்த சஃபா பையிங் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 10 வருடங்கள் ஆகும்.

 

ஷிக்கிர் தவான்!

இரண்டு முறை தொடர்ந்து கோல்டன் பேட் விருது வாங்கியே ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக் காரர். சாம்பியன்ஸ் டிராபி என்று வந்துவிட்டால் இவருக்குள் பேய் புகுந்துவிடும் போல, அசுரத்தனமான ஃபார்ம்க்கு வந்துவிடுவார். இவர் ஆயுஷா முகர்ஜி என்பவரை 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.

 

இரண்டாம் திருமணம்!

இவருக்கும் ஆயிஷாவுக்கும் இடையே பத்து வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், சின்ன வேற்றுமை என்னவெனில், ஆயுஷா தான் பத்து வயது மூத்தவர். ஆயிஷா மெல்பேர்னை சேர்ந்தவர். இவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையும் ஆவார். ஃபேஸ்புக் மூலமாக பழகிய இவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

ஆயிஷா ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தை பெற்றிருந்தார். 2014ல் ஷிக்கிர் தவானுக்கும் இவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது.

 

சோயப் அக்தர்!

ராவல்பிண்டி எக்ஸ்ப்ரெஸ் என அனைவராலும் அழைக்கப்படுபவர் சோயப் அக்தர் வேகப்பந்துவீச்சுக்கும், கோபத்திற்கும் பெயர் போன விளையாட்டு வீரர். இவரை கண்டு அஞ்சாத வீரர்களே இல்லை எனலாம். ஆனால், இவரே கண்டு அஞ்சிய வீரர் சச்சின் டெண்டுல்கர்.

 

19 வருடம்!

சோயப் அக்தர் ரூபப் கான் என்பவரை 2014 ஜூன் 25ம் நாள் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களு இருவருக்கும் ஏறத்தாழ 19 வயது வித்தியாசம். சோயப் அக்தருக்கு வயது 42, ரூபப் கானுக்கு வயது 23.

 

வாசிம் அகரம்!

ஸ்விங் முறை பந்துவீச்சுக்கு பெயர்போனவர் வாசிம் அகரம். இதற்காகவே இவரை சுல்தான் ஆப் ஸ்விங் என்று புகழ்ந்து அழைப்பார்கள். வாசிம் அகரம் ஹுமா மஃப்தி என்பவரை 1995ல் திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு உடலின் பல்வேறு பாகங்கள் செயலிழந்து போகவே, 2013ம் ஆண்டு சென்னையின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

51 - 34!

பிறகு, இவரும் ஆஸ்திரேலிய பெண்மணி ஷானிரா தாம்சன் என்பவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 17. வாசிம் அக்ரமின் வயது 51, தாம்சனின் வயது 34.

 

கிளென் மெக்ராத்!

கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் லூயிஸ் புற்றுநோய் காரணமாக கடந்த 2008ம் ஆண்டு உயிரிழந்தார். பிறகு 2009 ம் ஆண்டு நடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போது, கிளென் மெக்ராத்திற்கும் சாரா லியோனர்டி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

 

காதல்!

இவர்கள் இருவரும் 2010ல் நவம்பர் மாதம் 18 நாள் திருமணம் செய்துக் கொண்டனர். கிளென் மெக்ராத்தின் இரண்டாவது மனைவியான சாரா லியோனர்டிக்கும் இவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 12 ஆண்டுகள். சாரா லியோனர்டி வயது 35, கிளென் மெக்ராத் வயது 47.

Image Credit: mouthsofmums

 

சச்சின் டெண்டுல்கர்!

திருமணத்தில் வயது வித்தியாசம் என்ற பேச்சு எப்போது எழுந்தாலும் அதில் பாதிக்க்ப்படும் நபர் சச்சின். அதிலும் பெண்ணுக்கு வயது அதிகமாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஏன், சச்சின் பண்ணிக்கல... என எடுத்துக்காட்டாக கூறி பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

 

அனைவரும் அறிந்ததே...

சச்சினும், அஞ்சலியும் 1990ல் காதலிக்க துவங்கினார்கள். இவர்கள் இருவரும் 1995ல் திருமணம் செய்துக் கொண்டனர். சச்சினை விட அஞ்சலிக்கு ஐந்து வயது அதிகம் என்பது இந்திய நாடே அறிந்த கதை.

 

தினேஷ் கார்த்திக்!

தினேஷ் கார்த்திக் முதலில் நிகிதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். இப்போது தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவியான நிகிதா இந்திய அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் வீரரான முரளி விஜயை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மூன்றாவது குழந்தை கடந்த அக்டோபர் 2ம் தேதி பிறந்தது குறித்து முரளி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

 

ஸ்குவாஷ் வீராங்கனை!

தினேஷ் கார்த்தி நிகிதாவை விவாகரத்து செய்த பிறகு, தீபிகா எனும் ஸ்க்வாஷ் விளையாட்டு வீராங்கனையை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஆறு வருட வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு வருடம் என்பது முந்தைய தலைமுறையில் சாதாரணமாக இருந்தாலும், இந்த தலைமுறையில் இது கொஞ்சம் அதிகமாக தான் தெரிகிறது.

 

பெரும்பாலான முதலிரவுகள் இப்படித்தான் முடிகின்றதாம்… தெரியுமா உங்களுக்கு?