ரசிகர்களின் அதிருப்தியை முறியடிக்கும் சிவாவின் விசுவாசம்..! தெறிக்க விடும் அஜித்தின் கடந்த கால வரலாற

‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். அஜித்தின் 58-வது படத்தின் டைட்டில் ‘விசுவாசம்’ என்று வைக்கப்பட்டுள்ளது. அதோடு ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் ‘விசுவாசம்’ திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனும் தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சாய் சித்தார்த் வெளியிட்டுள்ளார்.

அஜித் – சிவா – சத்யஜோதி பிலிம்ஸ் கூட்டணி ‘வீரம்’ படத்தில் அஜித்துடன் இணைந்த சிவா, நான்காவது முறையாக அஜித் படத்தை இயக்க இருக்கிறார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விவேகம் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘விசுவாசம்’ பட டைட்டிலின் மூலம் அஜித்தின் முந்தைய படங்களுக்கு இடையேயான ஒற்றுமை இன்னும் தொடர்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றிப் படமான ‘வீரம்”V’ ஆங்கில எழுத்தில் தொடங்குவதுதான்.

விடாத’V’ சென்டிமென்ட் ‘வீரம்’ படத்தை அடுத்து அடுத்து ‘வேதாளம்’ பிறகு சமீபத்தில் வெளியான ‘விவேகம்’ என கடந்த மூன்று படங்களும் ‘V’ ஆங்கில எழுத்தில் தொடங்குபவைதான்.

அதுமட்டுமல்லாமல் மூன்று டைட்டில்களுமே ‘வி’ ஆங்கில எழுத்தில் நிறைவு பெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘விவேகம்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அதனால், சிவாவுடன் அஜித் இணைவதில் அவரது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாமல் அதே கூட்டணியில் அதே போன்ற சென்டிமென்ட்களோடு தைரியமாக இறங்கியிருக்கிறார் அஜித்.

இந்தப் படம் அவரை வெற்றி திசை நோக்கிச் செலுத்துமா என்பதைப் பார்க்கலாம். வி ஜெயித்த வரலாறு உண்டு அஜித்தின் திரை வரலாற்றில் ‘V’ எழுத்தில் தொடங்கி வெற்றிபெற்ற படங்கள் பல உண்டு. ‘வான்மதி’, ‘வாலி’, ‘வில்லன்’, ‘வரலாறு’ ஆகிய படங்கள் நல்ல வெற்றியைத் கொடுத்திருக்கின்றன.

அஜித்தின் சினிமா கேரியர் ‘வாலி’ படத்திற்குப் பிறகு புதிய அத்தியாயத்தை எட்டியதையும் மறுத்துவிட முடியாது. விசுவாசம் ‘Victory’ எனும் வார்த்தையும் ‘V’ ல் தொடங்குவதுதான்.

அதையொட்டியே தொடர்ந்து அதே எழுத்தில் டைட்டில்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், எதிர்பார்த்தது தொடர்ந்து நிகழவில்லை. இந்தப் படத்தின் மூலம் ‘V’ சென்டிமென்ட் அஜித்தை காக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என அறியலாம்!