இது நெல்லை ரசிகர்களின் “விசுவாசம்” – தெரிக்க்கவிடும் FanMade போஸ்டர், பேனர்கள்

அஜித்தின் 58-வது படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகவிருக்கிறது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்தும் சிவாவும் இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைகிறார்கள்.

இந்தப் படத்திற்கு ‘விசுவாசம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் வெளியானதும் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகிவிட்டார்கள்.ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் ‘விசுவாசம்’ திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனும் தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சாய் சித்தார்த் வெளியிட்டுள்ளார்.அஜித்தின் ‘விவேகம்’ படம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருந்தது.

அஜித்தின் ஸ்டைல், பட கதை, பாடல்கள் என அனைத்து விஷயங்களும் மாஸாக இருந்தாலும் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் ரசிகர்களுகுக்கு சற்று ஏமாற்றம்.இந்த நிலையில் அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைக்கிறார். இந்தப் புதிய படத்தின் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இன்று ‘விசுவாசம்’ என்ற டைட்டிலை படத் தயாரிப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் டைட்டில் வெளிவந்த 10 நிமிடங்களிலேயே ட்விட்டர் சமூக வலைதளத்தில் உலகளவில் 4-வது இடத்திலும், இந்திய அளவில் முதல் இடத்திலும் #Viswasam டிரெண்ட் ஆகியுள்ளது.

 

‘விசுவாசம்’ படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட சில நிமிடஙகளிலேயே அஜித் ரசிகர்கள் டைட்டில் போஸ்டர்களையும் வடிவமைத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.என்ன நடந்தாலும் சூட்டோடு சூடாக ஃப்ளக்ஸ் பேனர் அடித்து தெறிக்கவிடும் “நெல்லை மாவட்ட சங்கை தல உயிர் ரசிகர்கள்” குழுவினர் இந்தமுறை மட்டும் சும்மா இருப்பார்களா என்ன..? டைட்டில் அறிவித்த சில நிமிடங்களிலேயே பேனர் அடித்து கொண்டாட்டத்தைத் துவக்கி விட்டார்கள்.

இத்தனை ராசிக்காரர்களுக்கு ஆபத்தா..? பிரச்சினை எப்படி வேண்டும் என்றாலும் வரலாம்? உஷாராக இருங்கள்...