சொந்த கணக்கில் இருந்து 12 மில்லியன் ரியாலை தானமாக கொடுத்த சவுதி இளவரசர்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளரவசர் முகமது பின் சல்மான் ஊழலுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நபர்கள் தங்களது 70 சதவிகித சொத்துக்களை அரசாங்கத்திற்கு எழுத்தி வைத்தால் தண்டனையிலிருந்து தப்பலாம் என்று இவர் எடுத்துள்ள நடவடிக்கை அனைவருக்கும் புதிதான ஒன்றாக உள்ளது.

சவுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு பட்டத்து இளவரசர்களில் தனித்து செயல்படும் முகமது பின் சல்மான் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

சட்ட ரீதியான நடவடிக்கைகள் மட்டுமின்றி நாட்டில் செயல்பட்டு தொண்டு நிறுவனங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சவுதியின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து 12 மில்லியன் ரியாலை தொகையை கொடுத்துள்ளார்.

 

அதிகம் பகிருங்கள் சளி,இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் அற்புத பொருள் இது தான் தெரியுமா?