தன்னை கிண்டல் செய்து மீம்ஸ் போடுபவர்களுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ப்ரியா

மாயா, கள்ளப்படம் ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி ப்ரியா. சமீபத்தில் இவர் நடித்த லட்சுமி குறும்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

யு-டியூபில் 3 மில்லியனை கடந்து இந்த குறும்படம் ஹிட் அடித்து வருகின்றது, இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் தன்னை பற்றியும் மற்றும் குறும்படம் பற்றியும் வரும் மீம்ஸ் குறித்து என்ன நினைக்கின்றனர்? என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் 'படைப்புகள் பற்றிய குறைகளை கேட்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதை நாகரிகமாகவும், மரியாதையுடனும் தெரிவிக்க வேண்டும். அநாகரிகமாகவும், அவமரியாதையுடனும், ஆபாசமாக குறை கூறுபவர்களுக்கு செவிசாய்க்க நாங்கள் தயாராக இல்லை’ என்று பதிலடி கொடுத்துள்ளார்

சென்னையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன்.. போலீசில் வாக்குமூலம் அளிக்க முன்வந்தார் இல்லத்தரசி