வாழ்நாளை குழந்தைகள் நலனுக்கு அர்ப்பணித்த சுவிஸ் மருத்துவர்: கிடைத்த கெளரவம்

மருத்துவ துறையில் செய்த வாழ்நாள் சேவைக்காக சுவிஸில் பிறந்த மருத்துவரை கம்போடியா அரசர் நோரோடோம் சிஹாமோனி கெளரவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் பிறந்தவர் பீட் ரிச்னர் (70). குழந்தைகள் மருத்துவரான இவர் கம்போடியா உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஐந்து மருத்துவமனைகளை நிறுவியுள்ளார்.

அதுவும் கம்போடியாவின் தலைநகரான ப்னோம் பென்னில் அமைந்துள்ள கன்தா போப்ரா மருத்துவமனையில் நோய் வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையளிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரிச்னரின் வாழ்நாள் மருத்துவ சேவையை கம்போடியாவின் அரசர் நோரோடோம் சிஹாமோனி பாராட்டி கெளரவித்துள்ளார்.

மருத்துவமனையின் 25-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய நோரோடோம் ரிச்னரை பாராட்டினார்.

ஆனால் துரதிஷ்டவசமாக சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ரிச்னர் சுவிஸில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

கடந்த 1974-ல் சுவிஸ் செஞ்சிலுவை சங்கம் சார்பாக கம்போடியா சென்ற ரிச்னர் 1962-ல் கம்போடியா அரசர் சிஹானவக் கட்டிய கன்தா மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

அவருக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்த கைமர் ரவுக் என்ற அரசர் ரிசனரை நாட்டை விட்டு வெளியேற்றினார்.

பிறகு கடந்த 1991-ல் ரிச்னர் கம்போடியாவுக்கு அழைக்கப்பட்ட நிலையில் 1992-ல் கன்தா போப்ரா மருத்துவமனையை மறுகட்டமைப்பு மூலம் ரிச்னர் புதுப்பித்து திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வழக்கில் சிக்கி சின்னபின்னமான நடிகைகள்