பிரபல யூசி பிரவுசர் கூகிளில் இருந்து நீக்கம்வேகம் வேகம்னு பின்னாடி போனீங்களே

இந்திய சந்தையில் அமோக ஆதரவினை பெற்ற மொபைல் உலாவியாக உள்ள யூசி பிரவுசர் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இந்தியளவில் மிக அதிகமாக தரவிறக்கப்பட்ட செயலியாகும்.

50 சதவிகித இந்திய ஆண்ட்ராய்டு பயனர்களால் பயன்படுத்தப்படுகின்ற யூசி பிரவுசர் பயனாளரர்களின் தனிப்பட்ட விபரங்களை சீனாவில் உள்ள ரிமோட் சர்வருக்கு அனுப்புவதனை ஹைத்திராபாத்தில் உள்ள அராசங்க ஆய்வகம் இதனை கண்டறிந்துள்ளது.

உங்கள் மொபைல் இணையத்தை வை-பை வாயிலாக இணைத்திருக்கும் போது IMSI (international mobile subscriber identity) மற்றும் IMEI (international mobile equipment identity) விபரங்களை சீனாவில் உள்ள செர்வருக்கு அணுப்புவதனை அரசு உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பிசினஸ் ஸ்டாண்டர்டு தனிப்பட்ட தகவல்களை சீனாவில் உள்ள தனது சர்வருக்கு அனுப்புவதனால் விரைவில் யூசி பிரவுசர் மற்றும் நியூஸ் ஆகியவற்றின் மீது மத்திய அரசு ஒழுங்குமுறை நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எந்தவித அறிவிப்புமின்றி ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது யூசி பிரவுசர். அதே வேளையில் அதன் மற்றொரு வெர்ஷனான யூசி பிரவுசர் மினி நீக்கப்படவில்லை.

இன்னும் 30 நாள்களுக்கு யூசி பிரவுசருக்கு ப்ளே ஸ்டோரில் தடை இருக்கும். தரவிறக்கத்தை அதிகரிப்பதற்காகத் தவறான வழியில் செயல்பட்டதே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கத்துக்குக் காரணமாகும்.

காதலிக்க மறுத்தால் எரிச்சிருவேன்.. பெண்ணை மிரட்டிய நடிகை புவனேஸ்வரி மகன்.. பரபர தகவல்கள்!