பிரதமர் மோடியின் திட்டத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை : ஐநா குற்றச்சாட்டு..!!

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை என்று ஐநா சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா என்ற கனவுத் திட்டத்தை பிரமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ஆனால், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த முறை ஐநா சபையும் அந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டத்தால் இந்தியாவின் தூய்மை மேம்படவில்லை. மாறாக மோசமடைந்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மனித கழிவுகளை மனிதனே அகற்றக்கூடிய நிலை தான் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், முன்னேற்றம் அடையும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவேயில்லை.

மனித கழிவுகளை அகற்றும் பணிகளுக்கு கூட இந்திய அரசு மனிதனையே பயன்படுத்துவது மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது, என்று கூறியுள்ளது.

அடுத்த படத்திற்காக தல அஜித் செய்த அதிரடி காரியம்..! அதிர்ச்சியில் நடிகர்கள் …!!