லண்டனில் 12 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல்: ஒருவர் உயிருக்கு போராட்டம்

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு சர்கஸ் நிலையத்தில் 8 முதல் 12 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த இருவரை கொடூரமாக தாக்கியதால் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் தலைநகரான லண்டனில் உள்ள Oxford Circus நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 11.15 மணி அளவில் 8 முதல் 12 போர் கொண்ட கும்பல் அங்கிருந்த இரண்டு ஆண்களை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

இதில் ஒருவருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான மற்றொரு நபருக்கு சிறிய அளவிலான காயம் தான் என்றும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், தாக்குதல் நடத்திய நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதில் பெண்களும் ஈடுபட்டுள்ளனர் என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது

வருமான வரி ரெய்டால் லாபம் தான்...'ஆல் இஸ் வெல்' மூடில் சசிகலா குடும்பம்!