எங்கு கொண்டு சென்றுள்ளனர், மறைந்திருக்கும் மர்மம்..? அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை கைது செய்ய வந்த காவலர்கள், காவலர் உடுப்பிலோ, அடையாள அட்டையினை காண்பித்தோ உள்நுழையவில்லை.

வழக்கறிஞருக்கோ , நண்பர்களுக்கோ விவரம் சொல்ல அனுமதிக்கவில்லை. அவர் கிட்டதட்ட கடத்தப்பட்டிருக்கிறார். எங்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் எனவும் இதுவரை தெரியவில்லை.

கந்துவட்டி சம்பவத்தில் இசக்கிமுத்து என்பவர் நெல்லை ஆட்சியாளர் அலுவலகத்தின் முன் தன் குடும்பத்தினருடன் தீக்குளித்த காட்சி உலகளவில் அதிர்வை ஏற்படுத்தியது..

கத்துவட்டி கொடூர சம்பவத்தை முன்வைத்து, 24.10.2017-இல் கார்ட்டூன் வரைந்திருந்தார் பாலா. அரசியல்வாதி, மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை அதிகாரிகளை  சித்தரித்து படம் வரைந்துள்ளார்..

 

 

அவரது கணிணி, மொபைல் போன் உட்பட பலவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
அவர் குடும்பம் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

 

வழக்கறிஞர்கள் இது குறித்து சட்டரீதியான முன்னெடுப்புகளை செய்ய முன் வர வேண்டும்..இதுவரை நெல்லை சம்பவத்திற்கு என்ன தீர்வு என்று தெரியவில்லை..? மக்களும் அனைத்தையும் மறந்து விட்டு ஓட தயாராகிவிட்டனர்..

நம் மறதியை பலர் தவறாக பயன்படுத்தி கொள்கின்றனர்,,

கார்ட்டூனிஸ்ட் பாலாவை எந்த காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் எனும் விவரம் மர்மமாக உள்ளது..

அனுராதபுர மண்ணில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் புதைந்துள்ளன!