சென்னை சாலைகளில் மீண்டும் படகு போக்குவரத்து..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது.

தலைநகர் சென்னையில் நேற்று காலை முதல் பெய்து வரும் மழையால் சாலைகளில் மழைநீர் குளம் போன்று தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிகப்பட்டது.

இந்த மழை மேலும் தொடரும் என்று அறிவித்திருப்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், விழுப்புரம், நாகை மற்றும் தஞ்சை ஆகிய 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. விடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதியுற்றுள்ளனர்.

சென்னை வியாசர்பாடி, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்படவில்லை என்று கூறி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இந்நிலையில் சென்னையில் மழை காரணமாக மாநகராட்சி எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, சென்னை மாநகராட்சியில் மொத்தமாக 300 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றார். மேலும் அந்த பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தால், அவர்களை மீட்பதற்காக 109 படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, சாலைகளில் படகுகளை கொண்டு சென்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை, மீனவர்கள், திமுகவினர், மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு வந்தனர்.

அதே போன்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒக்கேனக்கலில் இருந்து பரிசல்களை இறக்கி உதவி செய்தார். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மூங்கில் மரங்களை வைத்து கட்டுமரம் தயாரித்து உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கில தோட்டா இருக்கா- என்னை அறிந்தால் படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சி இதோ