ஒரே நாளை குறிவைத்த தலதளபதி, சூர்யா!

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் விஜய், அஜித், சூர்யா. இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே பாக்ஸ் ஆபிஸ் பரபரப்பாகிவிடும்.

இதில் விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் மெகா ஹிட் அடித்தது, அஜித்தின் விவேகம், சூர்யாவின் சிங்கம்-3 எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் சூர்யா அடுத்து செல்வராகவனுடனும், விஜய் முருகதாஸுடனும் இணையவுள்ளனர், அஜித் வழக்கம் போல் சிவாவின் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார்.

இந்த மூன்று படங்களையும் அடுத்த வருடம் தீபாவளிக்கு களம் இறக்குவதாக பேசி வருகின்றனர், அப்படி இது சாத்தியம் என்றால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் பரபரப்பாக இருந்தாலும் வசூல் மிகவும் பாதிப்படையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனால், கண்டிப்பாக ஏதாவது ஒரு படம் கடைசி நேரத்தில் பின்வாங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

தமிழ் கடவுள் முருகன் சீரியலில் நடிக்கும் குழந்தை யார் தெரியுமா - அந்த குழந்தை ஆணா பெண்ணா ?