ரீல் புருஷனையே ரியல் புருஷனாக்கிய பிரியமானவள் சீரியல் புகழ் சிவரஞ்சனி

சென்னை: பிரியமானவள் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சிவரஞ்சனியும், விஜய்யும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமானவள் தொடரில் அவந்திகாவாக நடித்து வருபவர் சிவரஞ்சனி. அதே தொடரில் நடராஜாக நடித்து வருபவர் விஜய்.

இந்த தொடரில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் தெரிவித்தனர். இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டதால் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் சிவரஞ்சனி, விஜய்யின் திருமணம் இன்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

எனக்கு உங்களை பிடித்திருக்கிறது என்று விஜய்யிடம் ப்ரொபோஸ் செய்தது சிவரஞ்சனி தானாம். பிரியமானவள் தொடரிலும் அவர்கள் கணவன், மனைவியாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டில் பற்றி எரியும் தல-58 தகவல்களின் ஹாட் ஹைலைட்ஸ் இதோ….