ஜாக்குலின் பற்றி தெரியாத தகவல்கள்…! அவர் விஜய் டிவியில் நுழைந்தது எப்படி தெரியுமா?

விஜய் டிவியில் வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவர் ஜாக்குலின்.

சென்னையை சேர்ந்த இவர் பிப்ரவரி 8ம் தேதி 1996ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை இறந்து விட்டார். தாயார்தான் கஷ்டப்பட்டு வளர்த்தார்.

பொதுவாக தொகுப்பாளர் என்றாலே அழகு, கம்பீரம் மற்றும் சத்தமாக பேசும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஆனால் ஜாக்குலின் இது எதுவும் இல்லாமல் தனது கீச்சுகுரலாலேயே ரசிகர்களை கவர்ந்துள்ளார். விஜய் டிவி கடந்த 2015ம் ஆண்டு புதிதாக இரண்டு தொகுப்பாளர்களை களம் இறக்க முடிவு செய்தது.

இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் டாப் 10 பேரில் வந்தவர்களில் ஜாக்குலினும் ஒருவர்.

இறுதியில் இப்போட்டியில் வெற்றி பெற்று தொகுப்பாளராக மாறி விட்டார். இவர் இதற்கு முன்பு கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ரக்ஷனுடன் சேர்ந்து வழங்கி வருகிறார். மேலும் சினிமா வாய்ப்புகளும் வருகிறது. நயன்தாரா தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு விமான பணிப்பெண்ணாக வேலை செய்வதோடு லயோலா கல்லூரியில் விஸ்காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பு வருவதற்குள் ஆலோசனை சொல்லும் அஜித் ரசிகர்கள்