வடகொரியாவின் ரகசிய சித்திரவதை முகாம்: அம்பலமான மனித உரிமை மீறல்கள்

வடகொரியாவில் கிம் ஜோங் வுன் ஆட்சிக்கு வந்த பின்னரும் அதற்கு முன்னரும் செயல்பட்டு வந்த ரகசிய சித்திரவதை முகாம் மற்றும் ரகசிய சிறைச்சாலை தொடர்பில் இதுவரை வெளிவராத 20 புகைப்படங்கள் சமூக ஆர்வலர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படங்களில் உள்ள சித்திரவதை முகாம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், சித்திரவதை முகாம்களை பயம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான கருவிகள் என வடகொரியா விளக்கமளித்துள்ளதாகவும், இங்கு துன்பம் என்பது கிட்டத்தட்ட கற்பனைக்கு எட்டாதது எனவும் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் An-jeon-bu சிறைச்சாலை என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையானது கிம் ஜோங் வுன் ஆட்சியில் இதுவரை நடைபெற்ற கொடூர நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியுடன் வார்த்தைப் போரில் ஈடுப்பட்டு வரும் வடகொரியா, சிறைச்சாலைகளில் கட்டவிழ்ந்து விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தும் மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

வடகொரியாவின் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற வதை முகாம்களில் ஜேர்மனியின் நாஜி முகாம்களை விடவும் கொடூர தண்டனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், மனிதத்தன்மையை இழக்கச் செய்யும் மருத்துவமுறைகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான கைதிகள் பட்டினிச்சாவுக்கு இரையாவதாகவும், மருத்துவ வசதி தரப்படாமல் முக்கிய கைதிகள் வதைக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

வடகொரியாவில் சிறை கைதிகளை பெரும்பாலும் சுரங்க பணிகளுக்கே பயன்படுத்துவதாகவும், ஆனால் தற்காப்பு கருவிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பலவும் வெளி உலகம் அறிந்ததில்லை எனவும், தொடர் கருக்கலைப்பு, சுகாதார சீர்கேடு ஆகியவற்றால் பெண்கள் மிகவும் அவல நிலையில் சிறைச்சாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

திருமணமான ஆண்கள் தாய்லாந்து செல்வது ஏன்? மனைவிகளை அதிர வைக்கும் காரணங்கள்!