மீடியாவின் கேள்வி, ஆடி போன ஆட்சியாளர்..!! தீயணைக்கும் கருவி,மணல் வாளி கூட இல்லாத கலெக்டர் ஆபிஸா..?

நெல்லை கலெக்டர் ஆபிசில் கந்துவட்டி கொடுமையால் தாயும் தந்தையும் பச்சிளம் குழந்தைகளும் துடிதுடிக்க கருகிய கொடூரம் பார்ப்போரை பதறவைத்தது. பலரையும் குலைநடுங்க செய்தது. தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது..

ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடனுக்கு 8 மாதத்தில்ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் செலுத்திய பின்னும், பணம் கேட்டு நச்சரித்த பணம் திண்ணிகள்..

முதல்வரோ மெதுவாக இரண்டு நாள் கழித்து, ’தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003’ ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகிறார்

போலீசாரோ இசக்கி முத்துவிடம் இறப்பதற்கு முன் போனில்.

எங்கள கேட்டா வட்டி வாங்குன, சாவட்டும். எங்க புகார் கொடுத்தாலும், எங்க வரும்ணு தெரியும் கலெக்டருக்கும், எஸ்.பி க்கும் எதுக்கு பெட்டிசன் குடுக்க?

உனக்கு தெரியாம உன் பொண்டாட்டி கடன் வாங்கி இருக்கா? செருப்ப கழட்டி அடிச்சயா நீ..? என்று கேட்டுள்ளார்..மேலும், வாங்கிய கடனை கொடுக்க முடியல, நீ ஏன் உயிரோடு இருக்க.? டபுள் கேம் விளையாடுறீங்களா? என உரையாடிய ஆடியோ கிடைத்துள்ளது..

ஆட்சியாளரோ பேட்டியில், "இனி இப்படி நிகழாது'' என கூலாக கூறியுள்ளார்..

அந்த ஆட்சியாளருக்கு, இனி அவர் அலுவலக வாசலில் காரில் வந்து இறங்கும் போதெல்லாம் அந்தப் நெருப்புப் பிஞ்சுகளின் மரணத் துடிப்புகள்  நினைவில் ஈட்டி பாயாதா.?

இந்தக் கொடுமையில் ஆட்சியாளர்களைக் குறை சொல்ல எதுவுமில்லை. கந்து வட்டிக்கு எதிராக தெளிவான சட்டங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான் இயற்றப்பட்டிருக்கின்றன.

அதை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும் ,மாவட்ட நிர்வாகத்திற்குமே இருக்கிறது...உயிரின் விலை தெரியாதவர்கள், பிணந்திண்ணி கழகுகளைப் போல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆளும் போது என்ன நடக்கும்?

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைக்கும் கருவியோ, மணல் வாளிகளோ, அருகாமையில் தண்ணீரோகூட இல்லாமல் அலுவலகத்தை வைத்துள்ளார்கள்..

திருநெல்வேலிக்கு  உட்பட்ட பகுதியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 5 பேர் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது..

“அரசியல்வாதிகளின் செயல் என்னை அரசியலுக்கு வரவைத்துவிடும் போல் இருக்கிறது”