ராணுவ வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

பின்லாந்தில் ராணுவ வாகனம் மீது ரயில் மோதிய விலத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது பாதுகாப்பு படைவீரர்கள் சென்ற வாகனம் மீது உள்ளூர் ரயில் மோதியதே காரணம் என பின்லாந்து பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஒருவர் குறித்த ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணி எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தற்போது ஊசிமா பகுதி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் உரிய வாகனங்களில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த காரணம் இதுவரை வெளியாகவில்லை. பின்லாந்தில் வாகனங்களுடன் ரயில் மோதி ஏற்பட்ட விபத்துகளில் கடந்த 2000 ஆண்டில் இருந்து இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகின்றது.

 

 

ராணுவ வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்