பறக்கும் விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பிரித்தானிய பெண்மணி: சிறையில் தள்ளிய பொலிஸ்

மது போதையில் இருந்த பிரித்தானிய பெண்மணி ஒருவர் பறக்கும் விமானத்தில் ஏனைய பயணிகளுடன் ரகளையில் ஈடுபட்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவின் கான்கன் பகுதிக்கு செல்லும் விமானத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதிக மது போதையில் இருந்த Bridget Hanley(34) சக பயணிகளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மட்டுமின்றி விமான ஊழியர்களை தாக்கவும் முயன்றுள்ளார்.

இதனால் பறக்கும் விமானத்தில் சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சக பயணிகளுக்கு இது தொல்லையாக மாறவே, குறித்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஹான்லீயை தடுத்து நிறுத்தி தாற்காலிகமாக கைது செய்தார்.

 

 

இதனையடுத்து கனடாவின் கியூபெக் நகர விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து, தயார் நிலையில் இருந்த பொலிசார் ஹான்லீயை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அடுத்த நாள் அவரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விமான நிலைய நிர்வாகிகள், அவருக்கு 20 நாட்கள் சிறை தண்டனை பெற்றுத்தந்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த விவகாரம் தொடர்பில் குற்றவியல் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தவிர்க்க ஆவன செய்யப்படும் எனவும் விமான சேவை நிறுவனம் சக பயணிகளுக்கு உறுதியளித்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து குறித்த விமானம் காலதாமதமாக கான்கன் விமான நிலையம் சென்றடைந்ததாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பாதங்களை படமெடுத்து பணம் சம்பாதிக்கும் மொடல் அழகி ஜெஸிகா