2017-ம் ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் தமிழ்ப்படம் “மெர்சல்” – இன்று வரை எவ்வளவு வசூல் தெரியுமா..?

2017ம் ஆண்டு ஆரம்பித்து பத்தாம் மாதமான அக்டோபர் மாதமும் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை ‘மெர்சல்’ படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு வெற்றி கிடைக்க தமிழ்த் திரையுலகம் பத்து மாதம் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

தெலுங்கிலிருந்த வந்த ‘பாகுபலி 2’ படம் தான் இந்த ஆண்டில் இதுவரை அதிக வசூலைக் கொடுத்த படமாக இருந்தது. அந்த சாதனையை ‘மெர்சல்’ படம் ஏறக்குறைய கடந்துவிட்டது. ‘மெர்சல்’ படம் வெளியான ஐந்து நாட்களில் சுமார் 150 கோடி வரையில் வசூலித்துள்ளது என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 75 கோடி ரூபாயை சர்சவாதாரணமாகக் கடந்துள்ளது என்கிறார்கள். நேற்று வார முதல் நாள் என்றாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதாம். இந்த வாரம் ஓடினாலே போதும், படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபம் கிடைத்துவிட வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே, சில ஏரியாக்களில் அசலைப் பெற்று விட்டு லாபத்துடன் ஓடிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். சுமாரான வெற்றி பெற வேண்டிய படத்தை சூப்பர் வெற்றிப் படமாக மாற்றிக் கொண்டுத்த பெருமை சர்ச்சைகளைக் கிளப்பிய அரசியல்வாதிகளையே சாரும்.

ரஜினிகாந்த் வரை ‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவு சொல்லிவிட்டதால், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்த பின்னும் மக்கள் தியேட்டர்களை நோக்கி வந்தது திரையுலகத்தினரை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது.

கும்ப ராசிக்காரர்களே உங்க மனசுக்கு நீங்க எங்கயோ போயிடுவீங்க?