அடுத்த ஐடி ரெய்டு ஆர்த்தி வீட்டில்தான்…! பார்த்து சூதானமாக இருந்துக்க தாயே…!!

மெர்சல் படத்தில் விஜய் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை பற்றி பேசிய வசனங்களுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று அடம்பிடித்தது. மெர்சலுக்கு பாஜக கொடுத்த பிரச்சனை தேசிய அளவில் பேசப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமையில் இருந்து மெர்சல் விவகாரம் தான் ஹாட் டாபிக்காக உள்ளது. 2.5 மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் உங்களுக்கு பிடிக்காத காட்சியை நீக்க சொல்லி நீக்கவும் வைக்கிறீங்க.

ஆனால் ஐந்து வருடம் ஆளுகிற எங்களுக்கு பிடிக்காத எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் நீக்க சொன்னா எங்களை தேச விரோத சக்திகள் என்று சொல்லுறீங்க…என்னாங்க உங்க நியாயம்…என ட்வீட்டியுள்ளார் ஆர்த்தி.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் நீ சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துவிடும்மா என்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் அக்கா உங்கள் வீட்டிற்கு ரெய்டு வந்துவிட போறாங்க அமைதியாக இருங்க என்றும் ரசிகர்கள் கூறி உள்ளனர்.

கடன் பிரச்னையால் சொத்துகளை எல்லாம் விற்று வரும் நடிகர்..! எப்படி எல்லாம் இருந்தவர்…!!