அஜித்குமாரின் 58-வது படத்தை இயக்கப்போவது இவர் தான்!

அஜித் நடிக்கும் 58வது படத்தை இயக்கப்போவது யார் என்ற விபரம் தற்போது கசிந்துள்ளது.

அண்மையில் வெளியான ’விவேகம்’ படத்தின் போது காயமடைந்த நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் குணமடைந்து ஓய்வெடுத்து வருகின்றார். அடுத்த போட்டிக்கு தயாராகி வரும் அஜித்திடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

அடுத்து யாருடைய இயக்கத்தில் அஜித் நடிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் சிறுத்தை சிவாவின் பெயர் அடிபட்டு வருகின்றது.

அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய ஹாட்ரிக் படங்கள் சிவா தான் இயக்கி இருந்தார். தற்போது நான்காவது முறையாக இருவரும் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதோடு இந்த படம் போலீஸ் கதை என்பது கசிந்துள்ளது.

5 ரூபா டாக்டர் என்ன டாக்டர்.. எங்க 2 ரூபா டாக்டர பத்தி உங்களுக்கு தெரியுமாங்கோ..? கோயமுத்தூரை கலங்க வைத்த சம்பவம்