சண்டையில் கிழிந்த ஆடை: அவமானம் தாங்காமல் பெண் எடுத்த விபரீத முடிவு

பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் தனது ஆடை கிழிந்ததால் அவமானம் தாங்காமல் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவர் மனைவி திவ்யா (39).

தம்பதிக்கு ரஷிதா (5) என்ற மகள் உள்ளார்.

திவ்யா பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகம்மாள் என்பவரிடம் ரேஷன் கார்டு வாங்கி தரும்படி 6 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், நீண்ட நாட்களாகியும் நாகம்மாள் ரேஷன் கார்டு வாங்கிதரவில்லை. இதையடுத்து பணத்தை திவ்யா திரும்ப கேட்டுள்ளார்.

நாகம்மாளும் .3 ஆயிரத்தை திரும்ப கொடுத்த நிலையில் மீதி பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் திவ்யாவுக்கும், நாகம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது நாகம்மாள், திவ்யாவின் ஆடையை கிழித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானம் தாங்க முடியாமல் திவ்யா, தனது வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு கொண்டார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இனி எப்போதும் நடிக்கவே மாட்டேன்! சினிமாவை விட்டே வெளியேறிய தனுஷ் பட ஹீரோயின்