பிரான்சில் உயிரிழந்த பிரித்தானிய பெண்: புகைப்படம் வெளியிடப்பட்டது

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரான்சில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானதைத் தொடர்ந்து, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனைச் சேர்ந்தவர் Jess Wilkes(27), இவருக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் சென்றுள்ளார்.

அப்போது பிரான்சின் Avignon பகுதியில் உள்ள Rhone நதியில் படகில் சென்ற போது, எதிர்பாரதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் Jess Wilkes உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவருடன் பயணித்த நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் உயிரிழந்த Jess Wilkes-ன் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இனி எப்போதும் நடிக்கவே மாட்டேன்! சினிமாவை விட்டே வெளியேறிய தனுஷ் பட ஹீரோயின்