புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்: 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கிய பிரபலம்

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் பெரிய உணவகங்களை நடத்திவரும் ஜோஸ் ஆண்ட்ரெஸ், புயலால் பாதிக்கப்பட்டுள்ள பியூர்டோரிக்கோ மக்களுக்கு 15லட்சம் உணவுப் பொட்டலங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

கரீபியன் கடலில் அமெரிக்காவுக்குச் சொந்தமான பியூர்டோரிக்கோ தீவு உள்ளது. இந்தத் தீவைக் கடந்த 90ஆண்டுகளில் இல்லாத அளவில் இர்மா, மரியா என அடுத்தடுத்துப் பெரும் புயல்கள் தாக்கின.

இதில் 43பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்தனர். பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் பெரிய உணவகங்களை நடத்தி வரும் ஜோஸ் ஆண்ட்ரெஸ், புயலால் பாதிக்கப்பட்ட பியூர்டோரிக்கோ தீவைப் பார்வையிட்டார்.

தீவில் வீடின்றி உணவின்றித் தவிப்பவர்களுக்கு 15 லட்சம் உணவுப் பொட்டலங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

ஜோசும் அவருடன் வந்த சமையலர்களும் 15 இடங்களில் உணவு சமைக்கும் அறைகளை அமைத்தனர். அவற்றில் ஐந்நூறு தன்னார்வலர்கள் உதவியுடன் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து 10 லொறிகளில் ஏற்றிச் சென்று பொதுமக்களுக்கு வழங்கினர். இதுவரை 15லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏலத்துக்கு வந்த டயானா பயன்படுத்திய சொகுசு கார்: என்னென்ன வசதி உள்ளது தெரியுமா?