பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் கவனத்திற்கு!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் பிரித்தானியா பிரதமர் தெரேசா மே பேஸ்புக்கில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் எங்களை உற்றுநோக்கியுள்ளனர்.

என்னை பொறுத்தவரையில் குடிமக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், மற்ற தலைவர்களுக்கும் இதே கருத்து இருக்கும் என நம்புகிறேன்.

பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய பிரஜைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

நாம் அனைவரும் கோட்பாடுகளால் ஒன்றிணைந்துள்ளோம், வரும் வாரங்களில் பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய பிரஜைகளுக்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்.

பிரித்தானியா வெளியேறிய பின்னரும் ஐரோப்பிய பிரஜைகள் இங்கே வசிப்பது எளிதாக இருக்கும், எங்கள் நாட்டிற்கு அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

சட்டப்படி அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் இங்கு வசிக்கலாம், அவர்களுக்கு தங்குமிடம் மட்டுமின்றி உடல்நலம், ஓய்வூதியம் உட்பட மற்ற சலுகைகளும் கிடைக்கப்பெறும்.

இதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பிரித்தானியா பிரஜைகளுக்கு ஏற்றவாறு ஒப்பந்தங்கள் போடப்படும்.

எதிர்காலத்தில் பிரித்தானியாவில் வசிப்பதற்கு விண்ணப்பிக்கும் மக்களுக்காக நெறிப்படுத்தப்பட்ட வழிமுறையை உருவாக்கி வருகிறோம்.

மக்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்படுகிறது, குறைந்த செலவில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நிரந்தர குடியிருப்பு வைத்திருப்பவர்களும் முடிந்தவரை இடையூறு இல்லாமல் நிலைத்திருக்க முடியும்.

இதுமட்டுமின்றி ஐரோப்பிய பிரஜைகளுக்கென்று பிரதிநிதிகள் குழுவொன்று உருவாக்கப்படும், இதன்மூலம் பிரஜைகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப்படும்.

பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரம் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுடன் பிரித்தானியா இணைந்தே செயல்பட விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மெர்சல்' படத்தால் மெர்சலாகிப்போன பாஜக : நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை ரெய்ட்?