கடனை செலுத்த முடியாமல் தப்பிச் சென்றார் மஹிந்த

நாட்டின் கடன் பிரச்சினையை தீர்க்க முடியாமல், கடனை திருப்பி செலுத்த பணம் இல்லாமல் கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தப்பிச் சென்றதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி, பத்தேகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினாலேயே கடந்த 2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் இரண்டு வருடங்களுக்குள் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்கால இளம் தலைமுறையினர் கடனை செலுத்த வேண்டிய தேவை இருக்காது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் கடவுளாக செயற்பட்ட இலங்கை பெண்