விஜய் மற்றும் அஜித்திடம் கதை சொன்ன இயக்குனர் சுசீந்தரனுக்கு கிடைத்த பதில்..!

தமிழ் சினிமாவில் மிக தரமான படங்களை கொடுக்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளிவரும் படம் நெஞ்சில் துணிவிருந்தால். இப்படத்தில் சுதீப் கிருஷ்ணா விக்ராந்த், சூரி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த நீங்கள் ஏன் அஜித் ,விஜய், சூர்யாவை வைத்து ஏன் இது வரை படம் எடுக்கவில்லை என்பதற்கு “‘சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை. விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். சொல்கிறேன் என்று சொல்லியிருக்கார். அஜித்திடம் கதை சொல்ல அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

இதனால்தான் இவர்களை வைத்து இன்னும் படம் எடுக்கவில்லை.தீபாவளி எப்போதும் எனக்கு சிறப்பாக இருக்கும். ரஜினியின் நடித்த ‘தளபதி’ படத்தை தீபாவளி தினத்தில் பார்க்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு பார்த்தேன்.

நான் முதலில் உழைத்த பணத்தில் என் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி தினத்தில்தான் துணி எடுத்து கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

முதலிரவு அறையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா..