எங்கு பார்த்தாலும் பிணங்கள்.. உலகை உலுக்கும் சத்தம்: சம்பவத்தை நேரில் பார்த்தவரின் திகில் நிமிடங்கள்

சோமாலியா நாட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 276 பேர் உயிரிழந்துள்ளனர், 300 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பை நேரில் பார்த்த நபரின் கண்ணீர் வார்த்தைகள் இதோ,

அந்த நாள் எப்போதும்போலத்தான் துவங்கியது, பெரிதாக வேலை எதுவும் இல்லாததால், என் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.

இது குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது. திடீரென உலகையே உலுக்கும் பெரும் சத்தம், அப்படி ஒரு சத்தத்தை நான் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை.

சில நொடிகளில் கரும்புகை வானம் எங்கும் பரவியது. சூரிய ஒளியை மறைக்கும் அளவுக்கு அந்த புகை இருந்தது. நான் என் நண்பர்களுக்கும் சக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் போன்மூலம் தகவல் சொன்னேன்.

இப்படி ஒரு சம்பவத்தை அவர்களும் உணர்ந்திருந்தார்கள். எல்லோரும் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ்களை எடுத்துக்கொண்டு விரைந்தோம். அங்கு நாங்கள் கண்ட காட்சி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

2008-ம் ஆண்டிலிருந்து எங்கள் ஆம்புலன்ஸ் சேவை இயங்குகிறது. ஆனால், இப்படி ஒரு கோரத்தை நாங்கள் எங்கும் கண்டதில்லை.

எங்கு பார்த்தாலும் பிணங்கள், பெரிய பெரிய கட்டடங்கள் கூட இடிந்துவிட்டன, வாகனங்கள் தலைகீழாகக் கவிழ்ந்து எரிந்துகொண்டிருந்தன.

எங்கள் 10 ஆம்புலன்ஸ்கள் அவ்வளவு பேரையும் ஏற்றிச்செல்ல போதுமானதாக இல்லை. நகரில் இருந்த பலரும் பயத்தில் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் போனில் தொடர்புகொண்டு பேசினர். இதனால், மொத்த நெட்வொர்க்கும் ஜாம் ஆகிவிட்டது.

எங்களால் மருத்துவமனைகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை, நான் தினமும் இறந்தவர்களுடன் பயணிக்கிறேன்.

ஆனால், இந்தச் சம்பவத்தினால், நகரில் உள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் ஒருவர் இறந்திருந்தார் அல்லது இறந்தவர்களைத் தெரிந்து வைத்திருந்தனர். இப்போது மொத்த நகரமும் அழுதுகொண்டிருக்கிறது” என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.

நகங்களில் இந்த மாற்றங்கள் இருப்பின் மரணத்தின் விழிம்பில் இருக்கின்றார் என முடிவு எடுக்கலாம் தெரியுமா