யார் வந்தாலும் பிழைத்து விட்டு போய்விடுங்கள்…எங்களை ஆள நினைக்காதீர்கள் : ரஜினி – கமலை கடுமையாக தாக்க

தமிழகதின் அரசியல் சாணக்கியர் தலைவர் கலைஞரின் உடல்நலக் குறைவு, ஜெயலலிதா அவர்களின் இறப்பு ஆகியன தனக்கான அரசியல் கதவினை திறந்துவிட்டதாக நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் நினைத்துக் கொண்டுள்ளனர்.

அவர்கள் தமிழக அரசியலுக்கு வருவதற்கான சரியான நேரத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில், வார இதழ் ஒன்றினுக்கு பேட்டியளித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது ;

மற்ற தொழில்களைப்போல சினிமாவில் நடிப்பதுவும் ஓர் தொழில், அதில் நடிக்கிற நடிகர்களை நீங்கள் ஏன் தூக்கி சுமக்கிறீர்கள், கொண்டாடுகிறீர்கள். இத்தகைய இழிவு நிலைக்கு ஊடகங்களும் ஓர் காரணமென” தெரிவித்தார்.

மேலும்,இந்த தொழிலுக்கு “யார் வந்தாலும் பிழைத்து விட்டு போய்விடுங்கள், ஆனால், எங்களை ஆள்வது ஓர் தமிழனாகத்தான் இருந்திட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் தமிழகம் மோசமான நிலைக்கு சென்றுவிடும்” என பேசியுள்ளார்.

பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் !!