இப்போ புரியுதா? கடைசில இதுதான் நம்ப நிலைமை.! இனியாவது நான் சொல்கிற மாதிரி செய்.! விடிய விடிய தினகரனு

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா தினகரனுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உடல்நிலை சரியில்லாத தனது கணவரை காண பரோலில் சசிகலா வெளியே வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னை குளோபல் மருத்துவமனைக்கு சென்று தனது கணவரை சந்தித்து வருகிறார்.

தனது கணவரை பார்க்க சசிகலா பரோலில் வெளியே வந்திருந்தாலும், அதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாகவே அனைவரும் கருதுகின்றனர்.

பரோலில் வெளியே வந்த சசிகலாவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தொடர்பு கொள்வார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால், இதுவரை சசிகலா தரப்பை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, அதிகாரம் கைவிட்டு போனதால் தினகரன் மீது அதிருப்தியில் இருந்த சசிகலா, அவரை கடுமையாக வசைபாடியதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில், நேற்று மீண்டும் கட்சி நிலைமை பற்றி தினகரனிடம் சசிகலா பேசியிருக்கிறார்.

அப்போது, நாம்தான் சிலருக்கு பதவி வழங்கினோம். ஆனால் இப்போது அவர்கள், நமது குடும்பத்தையே ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அவர்களது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், ஆட்சியை தொடர்ந்து நடத்தவும், நமது குடும்பத்தை துணித்து எதிர்க்கிறார்கள்.

அதிகாரம் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

அதனால், இனி கட்சியை எப்படி மீண்டும் கைப்பற்றுவது என்பதை மட்டும் நீ யோசிக்க வேண்டும் என்று சில அறிவுரைகளை தினகரனுக்கு சசிகலா வழங்கியிருக்கிறாராம்.

பிக்பாஸ் வீட்டுக்கு மீண்டும் வந்திருப்பேன்.! அவர்தான் என்னை தடுத்து விட்டதாக கூறிய ஓவியா..!!