கட்டுங்கள் அணையை நாமும் மார் தட்டுவோம்… கர்நாடகாவை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தமிழர்களிடையே பரவி வரும்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் ஆப்பிலும் ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற தகவல் வெளியானது.

சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தாலும், பலர் அதற்கு அப்போதிருந்தே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பெரிய அளவிலான அணை கட்டமைப்பு தேவையில்லை என்றாலும், சிறிய அளவில் தடுப்பணைகள் கட்டினாலே போதுமானது என்று வல்லுநர்கள் கருத்து வெளியிட்டனர்.

ஈரோடு மாவட்டத்திலும், ஊட்டிலும் பல டி.எம்.சி தண்ணீர் அனாமத்தாக கர்நாடக ஆற்றில் சென்று கலப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது.கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.

பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத்திற்குள் பாய்கிறது.

ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண்டுள்ளது.

ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும் என்பது தான் தற்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் இருக்கும் 90 சதவிகித மக்களை சென்றடைந்து விட்டது. நீர் மேலாண்மை குறித்த அறிவு தற்போது நம் மக்களிடையே மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்து உள்ளது.

அடுத்த உலகப்போர் ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காக தான் இருக்கும் என்று பல மேலை நாட்டு ஆய்வாளர்களும் தங்கள் முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதற்கு முன்னரே அதன் தாக்கத்தை உணர்ந்த நம் மக்கள் களத்தில் இறங்கி விட்டனர். இன்னும் கட்டப்படாத அணைக்கே மக்கள் இந்த அளவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பொழுது, இனி காவிரியில் மென்மேலும் அணை கட்டும் முயற்சி தடைபட்டு விடுமோ என்று கர்நாடகம் அஞ்சுகிறது.

நதிநீர் பங்கீட்டிற்கான சர்வதேச தாவே விதி சமபந்தமாக கூட தகவல் வெளிவந்து விட்டது. இனி எந்த வகையிலும் சட்டதிற்கு புறம்பான வகையில் தமிழகத்தின் மீது கை வைக்க முடியாது.

ஆனால் ஆட்சியாளர்கள் அலங்கோலமே தமிழகத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு,

ஒரு அறிவார்ந்த, நீர்மேலாண்மை அறிவு கொண்ட, மக்களின் நலனையே விரும்பும் அரசியல் வாதியை தேர்ந்தெடுத்தால் மட்டுமே தமிழகம் தழைக்கும்.

மாற்றம் என்பது மக்களிடம் இருந்து தான் தொடங்க வேண்டும், மக்கள் மனதில் அறிவார்ந்த மாற்றம் நிலைகொள்ள துவங்கி விட்டால், அனைவரது வாழ்விலும் மாற்றம் முன்னேற்றம் சாத்தியமே.

"மறுபடியும் அஜித் என்னைக் கூப்பிடுவார்னு நம்பிக்கை இருக்கு!" காத்திருக்கும் அப்புக்குட்டி