ஆரவ் வெற்றி பெற யார் காரணம் தெரியுமா! அவரையே மேடையில் சொல்ல மறந்து விட்டார்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் ஆரவ் வெற்றி பெற்றார். சினேகன் இரண்டாம் இடம் பெற்றார். வெற்றி பெற்ற ஆரவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சினேகன்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

சினேகனுக்காக திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாக்கு சேகரித்தனர். ஆனால் அனைவரது கணிப்பையும் தவிடு பொடியாக்கி ஆரவ் வெற்றி பெற்று விட்டார்.

மேலும் ஆரவ் வெற்றி பெற ஓவியாவின் ரசிகர்கள் முக்கிய காரணம்-. பிக்பாஸ் வீட்டில் ஆரவுடன் ஏற்பட்ட காதல் தோல்வி காரணமாக ஓவியா வெளியேறினார். இருந்தாலும் இறுதி போட்டியில் ஆரவைத்தான் ஓவியா ஆதரிப்பார் என அவரது ரசிகர்கள் கருதினர்.

எனவே ஓவியா ரசிகர்களும் ஆரவுக்கு ஓட்டு போட்டனர். இதன் காரணமாக சினேகனை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தான் ஓவியாவால்தான் இந்த அளவுக்கு வாக்குகள் பெற்றோம் அவருக்கும் தெரிந்து இருக்கும்.

ஆனால் மேடையில் ஓவியாவை பெயரை ஒரு இடத்தில் கூட உச்சரிக்கவில்லை. இது ஓவியா ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆரவின் வெற்றிக்கு பின்னால் விஜய் டிவி-யின் அரசியல் சதி!