பிக்பாஸில் இவருக்கு கொடுக்காமல் துரோகம் செய்து விட்டார் கமல்: லேப் டாப்பை உடைக்கும் ரசிகர்

திரைப்பட நடிகரான கமல்ஹாசன் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதன் படி நிகழ்ச்சியும் 100 நாட்கள் சென்றது. இதில் ஒவ்வொருவரும் மக்கள் அளிக்கும் வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேற்றப்பட்டு வந்தனர்.

அந்த வகையில் நிகழ்ச்சியின் இறுதி நாளில் ஹரிஷ், ஆரவ், சினேகன் மற்றும் வெங்கட்ராமன் ஆகியோர் இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றபப்ட்டனர்.

இதையடுத்து இறுதியாக சினேகன் மற்றும் ஆரவ் ஆகியோர் இருந்தனர். அப்போது பிக்பாஸ் பட்டத்தை வெல்வது ஆரவ் தான் என்று கமல் அறிவித்தார்.

இதில் பலருக்கும் ஆச்சரியம், ஏனெனில் இறுதிநாளின் போது நிகழ்ச்சியை காணவந்த பலரும் மேடையை நோக்கி சினேகன் தான் என்று ஆரவாரம் செய்தனர். ஆனால் ஆரவ் வெற்றியாளர் ஆனார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியைக் கண்ட ரசிகர் ஒருவர் கமல் சார் நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள் உங்களை நம்பிதான் பார்த்தோம், என்று கூறி டிவி மற்றும் லேப்டாப் போன்றவைகளை உடைக்க முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஆரவின் வெற்றிக்கு பின்னால் விஜய் டிவி-யின் அரசியல் சதி!