விற்பனையில் உச்சத்தைத் தொட்ட விவேகம்; உலகம் முழுவதும் மொத்தம் 120 கோடிக்கு விற்பனை.

சென்னை: அஜீத்தின் விவேகம் படம் ரிலீஸாகும் முன்பே உலக அளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள விவேகம் படம் வரும் 24ம் தேதி ரிலீஸாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விவேகம் ரிலீஸுக்கு முன்பே வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

சிவா, அஜீத் கூட்டணி சேர்ந்த படங்களில் விவேகம் தான் புது சாதனை படைத்துள்ளது.

விவேகம்

விவேகம் ரிலீஸுக்கு முன்பே உலக அளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்காத ஒரு படம் புதிய சாதனை படைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம்

வேதாளம் படத்தின் தமிழக தியேட்டர் உரிமை ரூ. 42 கோடிக்கு போனது. இந்நிலையில் விவேகத்தின் தமிழக தியேட்டர் உரிமை ரூ. 54.5 கோடிக்கு சென்றுள்ளது.

 

சன் டிவி

விவேகம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. சன் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது, ஆனால் அது எவ்வளவு என்கிற தகவலை வெளியிடவில்லை.


ரசிகர்கள்

விவேகம் படம் ரிலீஸாக இன்னும் 10 நாட்களே உள்ளது என்று அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இந்நிலையில் ரூ. 120 கோடி வியாபார விவகாரம் அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளித்துள்ளது.

அஜீத் நடிப்பில் உருவான ‘விவேகம்’ படத்தின் ஏரியா பிசினஸ் அமோகமாக விற்பனையாகி உள்ளது.

‘வீரம்’, ’வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அஜித் - சிவா மூன்றாவது முறையாக கூட்டணி வைத்துள்ள படம் ‘விவேகம்’.

இந்தப் படம் முன்னர் வந்த வீரம், வேதாளம் படத்தை விட அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது.

வீரம் தமிழக தியேட்டர்களில் 34 கோடிக்கும், வேதாளம் 42 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ‘விவேகம்’ படம் 54.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

ஏரியா வாரியாக ‘விவேகம்’ என்னென்ன விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை சிட்டி - 5 கோடி,

செங்கல்பட்டு - 11.50 கோடி,

வட ஆற்காடு - 4 கோடி,

தென் ஆற்காடு - 3.25 கோடி,

மதுரை - 6.30 கோடி,

சேலம் - 5.35 கோடி,

கோவை - 9.30 கோடி,

திருச்சி, தஞ்சாவூர் - 6.20 கோடி,

திருநெல்வேலி, கன்னியாகுமரி - 3.60 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

மேலும் இந்த படம் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 120 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்பது கொசுறு தகவல்.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்